தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

இவர் நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை அடுத்து மாறன்,திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.இவற்றை அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சித்தாரா என்டேர்டைன்மென்ட்ஸ் மற்றும் Fortune Four சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை Tholi Prema,Rang De,Mr Manju உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படம் தமிழ்,தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அடுத்தடுத்து தனுஷ் பன்மொழி படங்களில் நடிப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.