2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

கே.ஜி.எப் படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 14 2022-ல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த படத்தின் முக்கிய ஷூட்டிங் நிறைவு பெற்றது, கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

yash kgf chapter 2 patch shoot going on srinidhi shetty prashanth neel