காதலனுடன் செல்போனில் பேசி பெற்றோரிடம் சிக்கிக்கொண்ட சிறுமி, பயந்து போய் வீட்டிலிருந்து தப்பிக்க நினைத்து சினிமா பாணியில் சாகசம் செய்வதாக நினைத்து, 6 வது மாடியிலிருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வெர்சோவா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 16 வயதான சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அதே நேரத்தில், இந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், வீட்டில் இருந்த அந்த 16 வயதான சிறுமி, நேற்றைய தினம் காலை தனது வீட்டில் இருந்தபடியே, தனது காதலன் உடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, தனது பெற்றோரினடம் அந்த சிறுமி, கையும் களவுமாக வசமாக மாட்டிக்கொண்டார்.

இதனால், “பெற்றோர்கள் அடுத்து நம்மை என்ன செய்வார்களோ?” என்று, பயந்து போன அந்த நிறுமி, வீடடிலிருந்து தப்பி நினைத்து, அந்த வீட்டில் உள்ள தனது அறையில் சென்று கதவை மூடிக்கொண்டு உள்ளார்.

மேலும், “பெற்றோரால் நமக்கு என்ன நடக்குமோ?” என்று, பயந்து போன அந்த சிறுமி, தனது வீட்டை விட்டு வெளியேறுவது என்று  முடிவு செய்து, ஒரு பையில் தனது உடைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீட்டின் வாசல் வழியாக தப்பிக்க முடியாது என்பதால், தனது வீடு இருக்கும் 6 வது மாடியில் உள்ள தனது அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக சினிமா பாணியில் கீழே இறங்க முடிவு செய்தார்.

அதன்படி, தனது அம்மாவின் புடவைகளை ஒவ்வொன்றாக முடிச்சு போட்டு கயிறு போல மாற்றி, அதன் ஒரு முனையை அறையில் இருந்த ஏசி மெஷினில் கட்டி நிலையில், தனது பையை எடுத்துக் கொண்டு, அந்த 6 வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து சேலையை பிடித்துக் கொண்டு கீழே இறங்க முயன்று உள்ளார். 

அப்போது, எதிர் பாராதவிதமாக சேலையில் இருந்த சிறுமியின் பிடி நழுவியதால், அந்த 6 வது மாடியில் இருந்து அந்த சிறுமி திடீரென்று கீழே விழுந்து உள்ளார்.

இதனால், கீழே விழுந்த வேகத்தில் அந்த சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் பதறிப்போய், அந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “சிறுமிக்கு முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக” தெரிவித்து உள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியின் காதலன் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.