மாறனாக மாஸ் காட்டும் தனுஷ் ! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
By Aravind Selvam | Galatta | December 30, 2021 12:21 PM IST
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் கடைசியாக அத்ரங்கி ரே படம் வெளியானது.
இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.
மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் சிலவற்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
Download high-res @dhanushkraja's #Maaran stills here.
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 30, 2021
👉https://t.co/WsaW3OOH2K
BIG SURPRISE: Unexpected new glimpse from Dhanush's Maaran - Check out!
30/12/2021 11:40 AM
BREAKING: Vetri Maaran launches new film - cast and crew officially revealed!
13/12/2021 07:15 PM
Dhanush's Maaran action-packed BGM update - G. V. Prakash's breaking statement!
11/12/2021 12:36 PM