ஒரு பெரிய பண்டிகைனா ஒரு சில படங்கள் சேர்ந்து ரிலீஸ் ஆகுறது வழக்கம்.இது பாக்ஸ் ஆபிஸ் வசூல் , ரசிகர்களோடு பேராதரவு இப்படி பல விஷயங்கள் இருக்குறதால இந்த பெரிய பண்டிகைகளை ஒட்டி சில படங்கள் ரிலீஸ் ஆகும்.அப்படி ரிலீஸ் ஆகுற படங்கள் பிரம்மாண்ட வரவேற்பையும் பெறும்.

இதுபோன்ற பண்டிகை நாட்கள்ல முக்கியமா எல்லாருக்கும் லீவ் கிடைக்கும்,போனஸ் போடுறதால கையில காசு வெச்சிருப்பாங்க முக்கிய குடும்பத்தோட எல்லாரும் எங்கயாவது வெளிய போகலாம்னு பிளான் பண்ணுவாங்க.அதுல முக்கியமான ஒண்ணா இருக்குறது தியேட்டர் தான்.

இதனால சில பெரிய படங்கள் , முக்கிய நடிகர்களின் படங்கள் பெரிய பண்டிகைகளுக்கு வெளிவருவது வழக்கம்.இப்படி போட்டி போட்டு படங்கள் ரிலீஸ் ஆகுறதால ரசிகர்கள் கூட்டத்துல தியேட்டர்கள் எல்லாம் திருவிழா மாதிரி இருக்கும்.

இப்படி பல வருஷமா சில நடிகர்களோட படங்கள் தொடர்ந்து சில பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிட்டு இருக்கு.இன்னும் ஒரு வாரத்துல ஆயுத பூஜை வர்றதால பலருக்கும் கிட்டத்தட்ட 1 வாரம் கிட்ட லீவ் கிடைக்கும்.அதுக்கு ஏத்த மாதிரி பொன்னியின் செல்வன் , நானே வருவேன் படங்கள் ரிலீஸ் ஆக இருக்கு.இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு இருக்கு

இந்த படங்கள் ரிலீசுக்கு இடையில ஒரு சுவாரசியமான ஒற்றுமை இருக்கு அது என்னென்ன தனுஷ் ஹீரோவா நடிச்சுருக்க நானே வருவேன் படமும் கார்த்தி ஒரு ஹீரோவா நடிச்சுருக்க பொன்னியின் செல்வன் படமும் பாக்ஸ் ஆபிஸ்ல மோதப்போகுது

இது முதல் தடவை இல்ல இதுக்கு முன்னாடி கார்த்தி,தனுஷ் ரெண்டு பேரோட படமும் சில தடவை ஒண்ணா ரிலீஸ் ஆகியிருக்கு.அப்படி ரிலீஸ் ஆகுறப்போ அது மறக்கமுடியாத தருணங்களாவும் மாறியிருக்கு.அப்படி தனுஷ்,கார்த்தி படங்கள் ரிலீஸ் எப்போவெல்லாம் ஆகியிருக்கு அப்படிங்கிறத நம்ம இப்போ பார்க்கலாம்

ஆயிரத்தில் ஒருவன் Vs குட்டி

2010 பொங்கலுக்கு முதல் முறையாக கார்த்தி , தனுஷ் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆகுது.குட்டி படம் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி அடையல , ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸ் ஆனப்போ பெரிய வரவேற்பை வாங்காட்டியும் , இன்னைக்கும் சிறந்த தமிழ் படங்கள்ல ஒண்ணா ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் Vs சிறுத்தை

2011 பொங்கலுக்கு மீண்டும் தனுஷ் , கார்த்தி படங்கள் ரிலீஸ் ஒன்றாக ரிலீஸ் ஆனது.ஒரு பக்கம் சிறுத்தை சக்கை போடு போட இன்னொரு பக்கம் ஆடுகளம் வெளுத்து வாங்குச்சு ,இந்த தடவை ரெண்டு படமுமே வசூல்ல பெரிய சாதனை படைச்சது , அதோட ஆடுகளம் படத்துக்கு சில தேசிய விருதுகளும் கிடைச்சது குறிப்பிடத்தக்கது

கொடி Vs காஷ்மோரா

கொஞ்ச வருஷ இடைவேளைக்கு பிறகு 2016 தீபாவளிக்கு தனுஷ் , கார்த்தி படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆச்சு கொடி,காஷ்மோரா ரெண்டு படமும் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது

பொன்னியின் செல்வன் Vs நானே வருவேன்

2022 ஆயுத பூஜை வருவதை ஒட்டி பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 , நானே வருவேன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது.தனுஷ் செல்வராகவன் கூட்டணியில சில வருஷம் கழிச்சு சேருறாங்க அதுனால ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.இந்த படத்துல தனுஷோட நடிப்பு பெரிய பாராட்டு பெரும்ன்னு பல பேரு பேசிட்டு இருக்காங்க.

அதேபோல கார்த்தி ஒரு ஹீரோவா நடிச்சுருக்க பிரம்மாண்ட படம் பொன்னியின் செல்வன்.பல வருஷமா பலரும் எடுக்கனும்னு எதிர்பார்த்து பல தடைகளை தாண்டி வர்ற படம்.விக்ரம்,ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷான்னு பல பேரு சேர்ந்து நடிச்சுருக்க படம் , நம்மளோட வரலாறை எடுத்து சொல்ற ஒரு படக்குன்னு எக்குத்தப்பான எதிர்பார்ப்புல வரபோற படம்.இந்த படம் பல விருதுகளை அள்ளும்ன்னு எதிர்பார்க்குறாங்க.

இப்படி இவங்க ரெண்டு பேரோட படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனாலே ஒண்ணு செம படம்னு பேரு வாங்கி பல விருதுகளை அள்ளும் , அல்லது பாக்ஸ் ஆபிஸ்ல பெரிய வசூலை ஈட்டும்.இந்த வருஷமும் அதே மாதிரி பாக்ஸ் ஆபிஸ் வசூல்ல இருந்து , பல விருதுகளையும் ரெண்டு படங்களும் அள்ளும்ன்னு எதிர்பார்த்து ரெண்டு படத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்