ரசிகர்கள் விரும்பும் வெரைட்டியான என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல்முறையாக தெலுங்கு திரையுலகில் களமிறங்கியுள்ளார். தமிழ் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 11வது திரைப்படமாக VP11 படம் தயாராகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் VP11 திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு 11-வது படமாகவும் நடிகர் நாக சைதன்யாவிற்கு 22-வது படமாகவும் உருவாகும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர்.

NC22 திரைப்படத்தை தெலுங்குத் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ்நிவாசா சித்தூரி தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்யும் NC22 திரைப்படத்திற்கு DY சத்தியநாராயணா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்றுகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு படப்பிடிப்பு தளத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

#NC22 in full swing #mysore #shooting #filmmaking #cauvery #vp11 @chay_akkineni @SS_Screens @srinivasaaoffl @srkathiir pic.twitter.com/V2X2K2PT9x

— venkat prabhu (@vp_offl) September 27, 2022