தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து தனக்கே உரித்தான ஸ்டைலில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் நடிகர் சிலம்பரசன்.TR. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து சிலம்பரசன்.TR நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் உருவான இப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது.

சிலம்பரசன்.TR உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் வெளியான நாள் முதலே ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக மாறியது. தொடர்ந்து திரையரங்கிலும் மல்லிப்பூ பாடலை ரசிகர்கள் கொண்டாடினர்.இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மல்லிப்பூ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…