தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஷால் துப்பரிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார். விரைவில் துப்பரிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இயக்குனர் A.வினோத் குமார் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று திங்கட்கிழமை இரவு (செப்டம்பர் 26) நடிகர் விஷால் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிகப்பு நிற காரில் வந்த சில நபர்கள் விஷால் வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிசிடிவி பதிவுகள் கொண்டு விஷால் வீட்டில் தாக்குதல் நடைபெற்றது குறித்து K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ள விஷால், வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. விஷால் வீட்டில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மர்மநபர்களால் நடிகர் விஷால் வீடு தாக்குதல்.!@VishalKOfficial #Vishal #Chennai #Attack pic.twitter.com/zzX6bHHggq

— Galatta Media (@galattadotcom) September 27, 2022