இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் தமிழில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் தி க்ரே மேன். முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களான ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து தி க்ரே மேன் திரைப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஜேக்கப் தி ஹன்டர் எனும் கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தி க்ரே மேன் படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி தற்போது வெளியானது. ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வரும் தி க்ரே மேன் ஸ்பெஷல் எமோஜி இதோ…