தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இதனை அடுத்து முதல்முறையாக தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகும் #தளபதி66 திரைப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ #தளபதி66 திரைப்படத்தை தயாரிக்கிறார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, ஜெயசுதா, சங்கீதா க்ரிஷ், ஸ்ரீகாந்த் மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி இசையமைப்பாளர் S.தமன் இசையமைக்கிறார்.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு தளபதி விஜயுடன் யுவன் ஷங்கர் ராஜா இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது நீண்ட காலமாக தளபதி விஜயின் திரைப்படத்திற்கு எப்போது யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இது குறித்து யுவன் சங்கர் ராஜா பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நீங்களும் தளபதி விஜய் அவர்களும் இணைந்து இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது ஏதாவது அறிவிப்பு இருக்கிறதா..? என்ற நமது கேள்விக்கு "விரைவில் வரும்" என யுவன் ஷங்கர் ராஜா தற்போது பதில் அளித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.