ஆகச்சிறந்த நடிகராக தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்து வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

மேலும் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பூஜை நேற்று செப்டம்பர் 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் படப்பூஜையில் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜீவி பிரகாஷ் குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ... 
 

♥️♥️♥️🤗🔥🔥#CaptainMiller #CaptainMillerPooja @dhanushkraja @ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash pic.twitter.com/J3ZMc3PJ3n

— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 22, 2022

#CaptainMiller Begins ❤️
Along side the Incredible @dhanushkraja anna 🤍
A Universe from the beautiful brain of @ArunMatheswaran & @SathyaJyothi @TGThyagarajan sir 🤍
A @gvprakash musical 🔥@priyankaamohan @johnkokken1 @nivedhithaa_Sat @theSreyas @CbePrashanth 🤗 pic.twitter.com/SfYrblIwYo

— Sundeep Kishan (@sundeepkishan) September 22, 2022