ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் படத்தோட டைட்டில் தான்.First Impression , Best Impression-ஆ அமைஞ்சுட்டா அது படத்துக்கு மிகப்பெரிய பலமா இருக்கும்.அப்படி பல படங்களுக்கு முதல் அடையாளமா இருக்குற டைட்டில்கள் பல படங்களை ஈஸியா ரசிகர்கள் கிட்ட கொண்டுபோய் சேர்க்கவும் செஞ்சுருக்கு.

பெரிய ஹீரோ , பெரிய இயக்குனர் இப்படி யார் படமா இருந்தாலும் டைட்டில் மிக முக்கியமான ஒண்ணா இருக்குது.ரசிகர்கள் ரசிக்கும்படி , அவங்களை ஈஸியா Attract பண்ற மாதிரி இருக்கனும் அதோட கதைக்கு ஏத்த மாதிரியும் இருக்கனும் இப்படி பல விஷயங்களை தாண்டி தான் இங்க படத்தோட டைட்டில்கள் முடிவு செய்யப்படுது.

இப்படி சில படங்கள் அதோட Catchy-ஆன டைட்டிலுக்காகவே பலராலயும் சுலபமா நியாபகம் வெச்சுக்க முடியுது.ஆரம்பம் முதலே படத்தோட எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது அடுத்ததா படம் ரிலீஸ் அப்பறம் ஈஸியா ரசிகர்களை நியாபகம் வெச்சுக்க வைக்கிறதுன்னு டைட்டில் பங்கு ரொம்ப பெருசு.

அதேமாதிரி எல்லா படத்துக்கும் புது டைட்டில் தான் வைக்கணும்ன்னு அவசியம் இல்லை , சில புது படங்களுக்கு சூப்பர்ஹிட் பட டைட்டில்களை இப்போலாம் படக்குழுவினர் யூஸ் பன்றாங்க.படத்துக்கு பொருந்துற மாதிரி சில பழைய டைட்டில்களை புது படங்கள் யூஸ் பண்ணிருக்காங்க.அப்படி என்னவெல்லாம் படங்கள் கிளாசிக் டைட்டில் பயன்படுத்தியிருக்காங்க அப்டிங்கிறதை இப்போ பார்க்கலாம்

ஆசை

1995-ல் அஜித் நடிச்சு செம ஹிட் அடிச்ச படம் ஆசை.இந்த படத்தோட டைட்டில் இப்போ 2022 கதிர்-திவ்யபாரதி நடிச்சு வெளிவரப்போற படத்தோட டைட்டில் ஆக அமைஞ்சுருக்கு.

லவ் டுடே

1997-ல் விஜய் நடிச்சு பெரிய வரவேற்பை பெற்ற படம் தான் லவ் டுடே.இந்த படம் டைட்டில் கூடிய சீக்கிரம் வெளிவரப்போற பிரதீப் ரங்கநாதன் நடிச்சு இயக்கியிருக்க படத்தோட டைட்டில் ஆக வெச்சிருக்காங்க

குஷி

2000-ல் விஜய் நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச படம் தான் குஷி.இந்த படம் இப்போ விஜய் தேவரகொண்டா , சமந்தா நடிச்சுட்டு இருக்குற ரொமான்டிக் படத்தோட டைட்டிலா மாறியிருக்கு

பொன்னியின் செல்வன்

2005-ல் ரிலீஸ் ஆன படத்துக்கு பொன்னியின் செல்வன்-ன்னு பேர் வெச்சிருப்பாங்க,இந்த பேர் இப்போ பிரம்மாண்டமாக உருவாகியிருக்க பொன்னியின் செல்வன் சரித்திர படத்தோட டைட்டில் ஆக ஆகியிருக்குறது குறிப்பிடத்தக்கது

வேட்டைக்காரன்

1964-ல் வெளியாகி புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடிச்சு பெரிய ஹிட்டான திரைப்படம் வேட்டைக்காரன்.இந்த படத்தோட டைட்டில் தளபதி விஜய் நடிச்சு 2009-ல் ஹிட் அடிச்ச வேட்டைக்காரன் பட டைட்டில் ஆக அமைஞ்சுது.

பில்லா

1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச பில்லா படம் 2007-ல் அஜித் நடிச்சு இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி ரீமேக் ஆச்சு அந்த படத்துக்கும் அதே டைட்டில் வைக்கப்பட்டது.

விக்ரம்

1986-ல் கமல்ஹாசன் நடிச்சு அதிரடி ஆக்ஷன் படமா ரசிகர்கள் மத்தியில ஹிட் அடிச்சது விக்ரம்.இந்த படத்தோட அடுத்த பார்ட் மாதிரி 2022-ல் ரிலீஸ் ஆன விக்ரம் படம் எடுத்து அதுக்கு விக்ரம்-ன்னு டைட்டில் வெச்சிருப்பாங்க.

வேலைக்காரன்


1987-ல் ரிலீஸ் ஆன ரஜினியோட சூப்பர்ஹிட் படம் வேலைக்காரன்.2017-ல் சிவகார்த்திகேயன் நடிச்ச படத்துக்கு கரெக்ட்டா இருக்கும்னு அந்த படத்துக்கு இதே டைட்டில் வெச்சாங்க

மாப்பிள்ளை

1989-ல் ரிலீஸ் ஆகி ஹிட் அடிச்ச ரஜினியோட மாப்பிள்ளை படத்தை இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் பண்ணி 2011-ல் தனுஷ் ரீமேக் பண்ணாரு , அந்த படத்துக்கும் இதே பேர் வெச்சாங்க.

பொல்லாதவன்

1980-ல் ரஜினி நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச பொல்லாதவன் படத்தோட டைட்டில் 2007-ல் வெளியான தனுஷ் படத்தோட டைட்டிலா மாறுனது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல்

1968-ல் நாகேஷ் நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச படம் எதிர்நீச்சல்,இந்த டைட்டில் 2013-ல்  சிவகார்த்திகேயன் நடிச்ச படத்தோட டைட்டிலா மாறுச்சு

படிக்காதவன்

1985-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்சு சக்கைபோடு போட்ட திரைப்படம் படிக்காதவன் , இந்த டைட்டில் 2009-ல் வெளிவந்த தனுஷ் படத்தோட டைட்டிலா மாறுனது குறிப்பிடத்தக்கது

காக்கி சட்டை

1985-ல் கமல் நடிப்புல வெளியாகி செம ஹிட் அடிச்ச படம் காக்கி சட்டை , இதே டைட்டில் 2015-ல் சிவகார்த்திகேயன் படத்துக்கு யூஸ் பண்ணது குறிப்பிடத்தக்கது

பாயும் புலி

1983-ல் ரஜினி நடிச்சு ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்ச படம் பாயும் புலி,இதே டைட்டில் 2015-ல் ரிலீஸ் ஆன விஷால் படத்தோட டைட்டில் ஆக மாறுச்சு

கர்ணன்

1964-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்ச சரித்திர படம் பெரிய ஹிட் அடிச்சுது , இந்த டைட்டில் 2021-ல் தனுஷ் நடிச்ச படத்தோட டைட்டில் ஆக அமைஞ்சது

நான் சிகப்பு மனிதன்

1985-ல் ரஜினி நடிச்சு பெரிய ஹிட் அடிச்ச படம் பாயும் புலி , இதே டைட்டில் விஷால் நடிச்ச திரில்லர் படத்தோட டைட்டில் ஆக மாறுனது குறிப்பிடத்தக்கது