நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக் காமெடி திரைப்படமாக கவனம் ஈர்த்த ஓரம் போ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்களாக அறிமுகமான இயக்குனர் ஜோடி புஷ்கர்-காயத்ரி தொடர்ந்து வ-குவாட்டர் கட்டிங் படத்தை இயக்கினர். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம் வேதா.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம்  ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இந்திய அளவில் கவனம் ஈர்த்த விக்ரம் வேதா திரைப்படம் சமீபத்தில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது.

இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிக்க விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் , Friday Filmworks மற்றும் T-Series Films இணைந்து தயாரித்துள்ள விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு PS.வினோத் ஒளிப்பதிவில், விஷால் மற்றும் ஷேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சாம்.CS பின்னணி இசை சேர்த்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி விக்ரம் வேதா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் விக்ரம் வேதா பாலிவுட் ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. அசத்தலான அந்த ட்ரைலர் இதோ…