பக்கா திரில்லர் ரெடி.. ‘No Entry’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் ஆண்ட்ரியா.. - பிரபல நடிகர் வெளியிட்ட டிரைலர் இதோ..

அதிரடியான திரில்லர் களத்தில் மிரட்டும் ஆண்ட்ரியா  வெளியானது புது பட டிரைலர் - Andrea new thriller movie trailer out now | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆண்ட்ரியா. துணை நடிகையாகவும் டப்பிங் கலைஞராக தமிழ் திரையில் வலம் வந்தார். அதன் பின் 2007 இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துசரம்’  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பரவலாக பிரபலமடைந்தார் ஆண்ட்ரியா.  அதன் பின் ‘விஸ்வரூபம்’, ‘அரண்மனை’, ‘தரமணி’, ‘வடசென்னை’, ‘அவள்’ போன்ற பல முக்கிய படங்களில் நடித்து தனகென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இதே நேரத்தில் பல முன்னணி திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்தும் பல பிரபல பாடல்களை பாடியும் வருகிறார் ஆண்ட்ரியா. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளிபடத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்களிடம் அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.  தற்போது ஆண்ட்ரியா தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட நாளுக்கு முன்பு ஆண்ட்ரியா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’. இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட தயாரிப்பாளர் ஸ்ரீதர் அருணாச்சலம் சார்பில்  ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Happy to launch the trailer of #NoEntry. Congrats @aasridhar20 & team.

▶️ https://t.co/nYxOJG98Qd@andrea_jeremiah @jumbocinemas @AlaguKarthik5 @aadhavkk @RanyaRao @Sathishoffl @gokulstunt @ajesh_ashok @dop_ramesh @PradeepERagav @gn_murugan @SonyMusicSouth @johnsoncinepro pic.twitter.com/J9ULM8wFCT

— VijaySethupathi (@VijaySethuOffl) February 20, 2023

அதிரடி அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் சாகசம் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள நோ என்ட்ரி படத்தின் டிரைலர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இப்படத்தில் ஆண்ட்ரியவுடன் இனைந்து ஆதவ் கண்ணதாசன், ரான்யா ராவ், ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அஜேஷ் இப்படத்திற்கு இசையமைக்க ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் இசை உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அகண்டா இரண்டாம் பாகம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த பிரபலம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

அகண்டா இரண்டாம் பாகம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த பிரபலம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு இதோ..

சினிமா

"அவருக்கு பிடிச்சா மாதிரி என்னை மாத்திக்கிட்டேன்" - கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியினரின் Cute Interview இதோ..

பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.. திடீரென சூழ்ந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.. திடீரென சூழ்ந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..