ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!

கௌதம் கார்த்திக்கின் 16 ஆகஸ்ட் 1947 பட முதல் பாடல் ப்ரோமோ,gautham karthik in 16 august 1947 movie first single kottikarapayale promo video | Galatta

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனான நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் ரவி தியாகராஜன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனது அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த ரங்கூன் மற்றும் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் நடித்த இவன் தந்திரன் ஆகிய திரைப்படங்கள் நடிகர் கௌதம் கார்த்திக்கை குறிப்பிடப்படும் நடிகராக தமிழ் சினிமாவில் உயர்த்தியது.

தொடர்ந்து ஹர ஹர மகாதேவகி, இந்திரஜித், ஆகிய திரைப்படங்களில் நடித்த, கௌதம் கார்த்திக் தனது அடுத்த படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து அடல்ட் ஹாரர் காமெடி திரைப்படமாக இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த Mr.சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறின.

கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் எழில் இயக்கத்தில் அவது வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக யுத்த சத்தம் திரைப்படம் உருவானது. இதனிடையே இயக்குனர் ஒபேலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் 16 ஆகஸ்ட் 1947. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஏ.ஆர்.முருகதாஸ் ப்ரொடக்சன் சார்பில் தயாரித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தை பர்பிள் புள் என்டர்டைன்மென்ட் மற்றும் காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. கௌதம் கார்த்திக் உடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் மற்றும் பலர் நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு செல்வகுமார். SK ஒளிப்பதிவில், சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தின் முதல் பாடலாக கோட்டிக்கார பயலே எனும் பாடல் நாளை பிப்ரவரி 20ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் கோட்டிக்கார பயலே பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த புரோமோ வீடியோ இதோ…
 

நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்! கண்ணீரில் ரசிகர்கள்
சினிமா

நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்! கண்ணீரில் ரசிகர்கள்

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே
சினிமா

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே

சினிமா

"அமைதியா HARD WORK பண்ணுங்க RESULT சத்தம் போடட்டும்!"- சிலம்பரசன்TRன் லேட்டஸ்ட் மாஸ் பதிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!