சின்னத்திரையில் பிரபல நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் வனிதா ஹரிஹரன்.சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தார்.

அடுத்ததாக விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் வனிதா ஹரிஹரன்.அடுத்ததாக தலையணை பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இவற்றை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1ல் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இவற்றை தவிர மாயா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார் வனிதா ஹரிஹரன்.இவருக்கு கார்த்திக் என்பவருடன் 2018 அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.சில மாதங்களுக்கு முன் தான் கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.