தல அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து டான்ஸ் மாஸ்டர் பதிவு !
By Sakthi Priyan | Galatta | July 01, 2020 11:05 AM IST

திரையுலகின் பிரபலமான டான்ஸ் கோரியோகிராபராக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் கோரியோகிராபராக பல புரிந்து இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் பிருந்தா. பின் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சி-ன் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு எட்டியது. அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள். 1995-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நடனமாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
சிறந்த நடன இயக்குனராக இருக்கும் பிருந்தா இயக்குனராக களமிறங்கவுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிருந்தா திரைப்பயணத்தில் இந்த ஹே சினாமிகா திரைப்படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், தல அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அஜித் சாருடன் முகவரி முதல் விஸ்வாசம் திரைப்படம் வரை பணிபுரிந்துள்ளேன். அஜித் சார் கிரேட்.. சிறந்த மனிதர். கடின உழைப்பாளி ஜோ. என் குரு நாதர் பி.சி.ஸ்ரீராம் சார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
MUGAVARI TO VISWASAM MOVIE With Ajit sir Great man . Hardworking joe . My Guru Pc sir . 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/wXTYmJOeqZ
— Brindha Gopal (@BrindhaGopal1) June 30, 2020
Vetri Maaran tweets after a long gap of 2 years - fans surprised!
01/07/2020 10:00 AM
Theatre owners reveal what's happening inside theatres during lockdown!
30/06/2020 09:27 PM
Ajay Gnanamuthu's 1st extensive interview on Thumbi Thullal making!
30/06/2020 08:01 PM