திருச்சியில் மனைவியை நண்பனுக்கு கணவன் தாரை வார்த்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அன்றாட கள்ளக் காதல் கதைகளுக்கு மத்தியில், இப்படியும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறுவது, நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக், அப்பகுதியில் மத போதகராக இருந்து வருகிறார்.

இவரும், இவருடைய நண்பரான திருச்சி, கே.கே.நகர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்த 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம் என்பவரும், கல்லூரியில் ஒன்றாகப் படித்தது முதல் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தனர்.

இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே, கடந்த 2005 ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண் ஒருவரை தினேஷ் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு உதவி செய்த தினேஷின் நண்பர் முகமது பாரூக், தினேஷையும் அவரது தங்கையையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதுடன், தினேஷுக்கு முகமது அஸ்லாம் என்றும் பெயர் சூட்டி உள்ளார். 

அதன் பிறகு, தினேஷ் என்ற முகமது அஸ்லாம் காதலித்து வந்த பர்வீன் என்ற பெண்ணையே, அந்த பெண்ணின் சொந்த பந்தங்களிடம் பேசி தன் நண்பனுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார் மத போதகர் முகமது பாரூக். இதன் காரணமாக, நண்பனும் மத போதகருமான முகமது பாரூக்கிற்கு, தினேஷ் என்ற முகமது அஸ்லாம் மிகவும் நன்றி கடன் பட்டிருந்தார். அந்த நன்றி கடனையும் தாண்டி, அவர்களுக்குள் நட்பு இன்னும் ஆழமாக இருந்தது.

அப்படிப்பட்ட நன்றி கடன் மிக்க நட்பு தான், அதீத அன்பால் நண்பனின் மனைவி மீது சபலப்பட்டு, மிகப் பெரிய துரோகத்தையும் செய்யத் தூண்டியிருக்கிறது.

முகமது பாரூக் - முகமது அஸ்லாம் நட்பு இப்படியாக நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த நிலையில், “ என்னுடைய வாழ்க்கையில் என் நண்பன் முகமது முகமது பாரூக் தான் எல்லாமும்” என்று அஸ்லாம் தன் மனைவி பர்வீனிடம் கூறியுள்ளார். அதன் பிறகு தான், அவர்கள் குடும்பத்தில் புயல் வீச தொடங்கி உள்ளது. 

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக முகமது அஸ்லாம் - பர்வீன் குடும்பத்தில் வறுமை தலை தூக்கி தாண்டவம் ஆடி உள்ளது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இது தொடர்பாக தன் நண்பன் முகமது பாரூக்கிடம் ஆலோசனை பெற்றுள்ளார் முகமது அஸ்லாம். அப்போது, “உன் வீட்டில் வந்த நான் யாகம் செய்கிறேன். 

அப்போது தான் உன் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் உன் திருமண வாழ்க்கை நன்றாக செல்லும் ” என்று ஐடியா கொடுத்துள்ளார் முகமது பாரூக். அதற்கு, முகமது அஸ்லாம் சரி என்று சொல்லி உள்ளார்.

அதன்படி, முகமது அஸ்லாம் வீட்டிற்கு வந்த முகமது பாரூக், வீட்டைச் சுற்றிப் பார்த்து மந்திரம் செய்வது போல் பாவனை செய்துவிட்டு, “ உன் மனைவியிடம் தான் பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக, உங்கள் குடும்பத்தில் புயல் வீசி, அநேக பிரச்சனைகள் ஏற்படுகிறது ” என்று கூறி உள்ளார்.

மேலும், தான் கொண்டு மயக்க மருந்து கலந்து நீரை, தீர்த்தம் என்று கூறி, அதை “உன் மனைவியிடம் தனி அறையில் வைத்து கொடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

அதன்படி, வீட்டில் உள்ள தனி அறையில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்ட நீர் கொடுக்கப்பட்டது. அதைக் குடித்த அந்த பெண் அந்த அறையிலேயே மயங்கி உள்ளார்.

அதன் பிறகு, அந்த அறையில் மந்திரம் ஓதிவிட்டு வருவதாகக் கூறி, ரூம் உள்ளே சென்ற முகமது பாரூக், மயங்கி இருந்த அந்த பெண்ணை தன் சொல்போனில் ஆபாசமாக வித விதமாகப் போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை, முகமது பாரூக் தொடர்ந்து மயக்க நிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு, முகமது பாரூக்கின் மனைவியும் துணை போய் உள்ளார். மனைவியின் துணையுடனேயே, நண்பனின் மனைவி பர்வீனை அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த விசயம் ஒரு கட்டத்தில் நண்பன் முகமது அஸ்லாமிற்கு தெரிய வரவே, அவருக்கு என்ன செய்து என்று தெரியவில்லை. அதைத் தொடர்ந்து, “ உன் மனைவியை அனுப்பி வை” என்று தன் நண்பனையே முகமது பாரூக் மிரட்ட தொடங்கி உள்ளார். நண்பனின் மிரட்டலுக்குப் பயந்த அஸ்லாம், தன் மனைவியை நண்பனக்கு தாரை வார்த்துள்ளார். இது, சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், பர்வீனின் ஆபாசப் படங்களை வைத்து அவரை மிரட்டி, தன் இச்சையை பர்வீனிடம் தொடர்ந்து முகமது பாரூக் தீர்த்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், பர்வீன் சேர்த்து வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் மிரட்டி அபகரித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பாகக் காவல் நிலையம் சென்றாலும், உறவினர்களிடம் புகார் கூறினாலும், ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் பாரூக்.

பாரூக்கின் டார்ச்சரை பொருத்து பொருத்து பார்த்த பர்வீன், ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில், பாரூக் மீது புகார் பர்வீன் புகார் அளித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது பாரூக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், திருச்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.