வேற ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதான மெலங்கே சுகன்யாவின் கணவர் 50 வயதான பிரபாகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தவர்.

இதனிடையே, மெலங்கே சுகன்யா தமிழகத்தில் வசித்து வந்த நிலையில், அவரது கணவர் பிரபாகரன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில், கணவருடன் சேர்ந்து வசிக்க விரும்பிய மெலங்கே சுகன்யா, கணவர் வசித்து வரும் ஐதராபாத்திற்கு சென்று விட்டார். அங்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்து, அந்த பெண்ணுடனே, வாழ்ந்து வந்த பிரபாகரன், மனைவி சுகன்யாவை தன்னுடன் தங்க அனுமதிக்காமல் தமிழகத்திற்கே திரும்பிச் செல்லும் படி கூறி, அவரை வீட்டை விட்டு வெளியே விரட்டியதோடு, ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, கடும் ஆத்திரமடைந்த சுகன்யா, கணவர் பிரபாகரன் இரவு நேரத்தில் நன்றாக தூங்கிய பிறகு, அவரை கொலை செய்துள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “ என் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் தூக்கத்திலேயே இறந்து விட்டதாகவும் ” சுகன்யா கூறி உள்ளார். 

இதனால், மனைவி சுகன்யா மீது போலீசாருக்க தொடர்ந்து சந்தேகம் எழவே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். 

அத்துடன், பிரபாகரனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த போது, பிரபாகரனின் உடலில் பல தீக்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுகன்யாவிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணையில், “ கள்ளக் காதல் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக, கணவரை நானே கொன்றேன் ” என்று சுகன்யா, கணவனைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், “ கணவனை எப்படி நூதனமான முறையில் கொலை செய்தேன் ” என்பதையும் சுகான்யா போலீசாரிடம் விளக்கிக் கூறினார். குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, வேற ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், மணலூர் பேட்டை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த 4 தினங்களாக ஆண் சடலம் கிடப்பதாகவும், அவற்றை அப்புறப்படுத்த போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அருகில் உள்ள பொரிக்கல் கிராம வனப் பகுதியில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், பொரிக்கல் கிராமமானது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும், இதன் காரணமாகத் திருவண்ணாமலை மாவட்டம், வெரையூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு, இது எங்கள் காவல் எல்லைக்கு உட்பட்டது இல்லை என்றும் கூறிவிட்டுச் சென்று விட்டனர். 

பின்னர், வந்த மணலூர் பேட்டை போலீசார் வந்து, இது எங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லை இல்லை என்று கூறி, அவர்களும் சென்று விட்டனர். 

இதன் காரணமாக, கடந்த 4 நாட்களாக அந்த ஆண் சடலம், எந்த போலீசாரால் எடுத்துச் செல்லப் படாமல் அங்கேயே கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. 

அத்துடன், உடலை எடுக்க போலீசார் வராத நிலையில், அந்த பகுதி இளைஞர்கள் அந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பி அந்த ஆண் சடலம் யார் என்று விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, சாத்தான் குளம் சம்பவத்தால் போலீசார் மீது அதிருப்தி இருக்கும் நிலையில், எல்லைப் பிரச்சனை மற்றும் கொரோனா பீதியால் போலீசார் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, அப்பகுதி பொது மக்களை கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.