தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்ற பரவத் தொடங்கியதைத் அடுத்து, நாடு முழுவதும் முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. முதலில் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்ததால், தற்போது 6 வது முறையாக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் 5 வது முறையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்று உடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் 6 வது முறையாக நீட்டிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் கடந்த கடந்த 25 ஆம் தேதி முதல் 3,509 பேருக்கும், 3,645 பேருக்கும், 3,713 பேருக்கும், 3940 பேருக்கும், 3949 பேருக்கும் கொரோனா பாதிப்பு நாள் தோறும் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால், தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

அத்துடன், தமிழகத்தில் இன்று மட்டும் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,141ல் இருந்து 1,201 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 58 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 17 ஆம் தேதி 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து கடந்த 24 ஆம் தேதி 2,866 ஆக அதிகரித்தது. அதன் பின்னர், தொடர்ந்து 8 நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. அதனைத் தொடர்ந்து 6 வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 க்கு மேல் அதிகரித்து, தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இந்நிலையில், தொடர்ந்து 6 வது நாளாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியது. 

அதன்படி, மதுரையில் இன்று மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,557 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது. 

சிதம்பரத்தில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 214 பேர் தனிமை படுத்துப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்று கொரோனாவுக்கு பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டங்களாக...

சென்னை - 2,393
மதுரை - 257
செங்கல்பட்டு - 160
திருவள்ளூர் - 153
காஞ்சிபுரம் - 90
க.குறிச்சி - 88
தேனி - 75
வேலூர் - 70
கடலூர் - 65
சிவகங்கை - 50
விருதுநகர் - 49
விழுப்புரம் - 47
நெல்லை - 45
திருச்சி - 40
தூத்துக்குடி - 40
திண்டுக்கல் - 37
ராமநாதபுரம் - 36
சேலம் - 25
ராணிப்பேட்டை - 24
தஞ்சை - 23
திருப்பத்தூர் - 22
திருப்பூர் - 20
க.குமரி - 20
ஈரோடு - 19
தி.மலை - 16
திருவாரூர் - 12
தென்காசி - 11
கோவை - 9
தர்மபுரி - 8
நீலகிரி - 7
கிருஷ்ணகிரி - 6
நாமக்கல் - 3
நாகை - 2
கரூர் - 1

ஆகிய மாவட்டங்கள் இன்று பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாகத் திகழ்கின்றன.

அதேபோல், கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தவர்களின் விபரங்களை மாவட்ட வாரியாக பார்க்கும் போது..

சென்னை - 42
செங்கல்பட்டு - 5
மதுரை- 3
திருவள்ளூர் - 2
ராமநாதபுரம் - 2
காஞ்சிபுரம் - 1
சேலம் - 1
திருவாரூர் - 1
திருவண்ணாமலை - 1
கரூர் - 1
விழுப்புரம் - 1

என இறப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிக பட்சமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக..

சென்னை - 58,327
செங்கல்பட்டு - 5,419
திருவள்ளூர் - 3,830
மதுரை - 2,557
காஞ்சிபுரம் - 1,977
திருவண்ணாமலை - 1,824
வேலூர் - 1,308
கடலூர் - 1,073

ஆகிய மாவட்டங்கள் தமிழகத்தில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகத் திகழ்கிறது. 

குறிப்பாக, தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு 2 வது முறையாக கொரோனா தொற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருக்கும் அவர், உடல் நிலை சீராக உள்ளதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மட்டும் 2,325 பேர் தமிழகம் முழுவதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.