ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.

டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.

இன்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹூப் குறித்த சில பதிவுகளை பதிவிட்டுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.இதனை தொடர்ந்து பல ரசிகர்கள் இவரிடம் இந்த நேரத்தில் எப்படி இதனை கற்றுக்கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த சம்யுக்தா தான் ஆன்லைனில் இந்த ஒர்க்கவுட் முறையை கற்றுக்கொண்டதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.மேலும் ஹூப் முறையில் தான் கற்றுக்கொண்ட வித்தைகள் சிலவற்றையும் விடீயோவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.