நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் சமது, அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 26 வயதான நிஷா பானு, ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அப்துல் சமதுவை 2 வதாக நிஷா பானு திருமணம் செய்துகொண்டார்.

எனினும், திருமணத்திற்குப் பின்பு நிஷா பானு, தனது நண்பர்களுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இருவருக்கம் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மனைவி மீது சந்தேகம் அடைந்த அப்துல் சமது, மனைவியைக் கண்காணிக்கும் பணியில் இறங்கினார். இந்நிலையில், சம்பவத்தன்று  பணி முடிந்து அப்துல் சமது, இரவில் வீடு திரும்பிய போது நிஷா பானு வேறு யாருடனோ தனது செல்போனில் பேசி கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, கணவர் அப்துல் சமது வீட்டிற்குள் வந்த உடன், தனது செல்போனை திடீரென துண்டித்துள்ளார். இது குறித்து மீண்டும் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. 

இந்த சண்டையின் போது, நிஷா பானுவின் செல்போனை கணவனர் அப்துல் சமது கேட்டுள்ளார். அவர், அதை தர மறுக்கவே, அந்த போனை கணவர் பறிக்க முயன்றுள்ளார். ஆனாலும், அவரும் செல்போனை தர மறுத்து விட பிடியாகக் கணவருடன் மல்லுக்கட்டி உள்ளார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அப்துல் சமது, அருகில் இருந்த குக்கரை எடுத்து அவரின் தலையில் ஓங்கி கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், நிஷா பானு ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

ஆனாலும், ஆத்திரம் தாங்காமல், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவரின் கழுத்தைக் கத்தியால் கொடூரமான முறையில் அறுத்து கொலை செய்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

சிறுது நேரத்தில் நிதானத்திற்கு வந்த அப்துல் சமது, தான் செய்த கொடூரத்தை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் தவித்துள்ளார். பிறகு, அங்கிருந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்று அவர் சரண் அடைந்தார். ஆனால், இந்த சம்பவம் நடந்தது திருப்பூர் தெற்கு காவல் நிலையம் என்பதால், அவரை தெற்கு காவல் நிலையத்தில், அந்த காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர், கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நிஷா பானுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சமது மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து காவல் சரண் அடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல், சிவகாசியிலும் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி 24 வயதான சரவணகுமார் - 22 வயதான ஜெயலட்சுமி தம்பதியினருக்குக் கயல்விழி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது.

மனைவி ஜெயலட்சுமியும் பட்டாசு தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், மனைவி மீது சரவண குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. 

எப்போதும் போல், நேற்று மீண்டும் சந்தேகம் வந்துள்ளது. அப்போது, கடும் ஆத்திரமடைந்த சரவண குமார், மனைவி ஜெயலட்சுமியை வீட்டுக்குப் பின்புறம் தர தரவென இழுத்துச் சென்று, கத்தியால் ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்து, கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்த வந்த போலீசார், சரவண குமாரை கைது செய்து, அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.