'ரஞ்சிதமே பாடலை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்!'- அதிரடியான பதிலளித்த முன்னணி நடன இயக்குனரின் மகள்! வீடியோ இதோ

நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்ஷதாவின் சிறப்பு பேட்டி,dance choreographer sridhar master daughter akshadha about ranjithame | Galatta

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ஸ்ரீதர் மாஸ்டர். ஆரம்ப கட்டத்தில் நடன கலைஞராக பல சூப்பர் ஹிட் பாடல்களில் நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்ரீதர் மாஸ்டர் தொடர்ந்து நடன இயக்குனராகவும் அசத்தி வருகிறார். குறிப்பாக காதலில் விழுந்தேன் படத்தின் "நாக்க முக்க" பாடல், தளபதி விஜயின் தலைவா படத்தின் "தமிழ் பசங்க", ஜில்லா படத்தின் "எப்ப மாமா ட்ரீட்டு", பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தின் முதல் பாடலான "எங்கேயும் காதல்" என பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தனக்கென தனி ஸ்டைலில் ஸ்ரீதர் மாஸ்டர் நடன இயக்கத்தில் வெளிவரும் பாடல்களின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு.

நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் அவர்களின் மகள் அக்ஷதா ஸ்ரீதர். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என சொல்வதற்கு தகுந்தார் போல் அக்ஷதாவும் நடனத்தில் அசத்தி வருகிறார். மேலும் அக்ஷதா தற்போது மருத்துவம் பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக இருக்கும் அக்ஷதா ஸ்ரீதர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் தனது நடனத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் பல ரசிகர்களை கொண்ட அக்ஷதா ஸ்ரீதர் தனது தந்தையும் நடன இயக்குனருமான ஸ்ரீதர் மாஸ்டர் அவர்களுடன் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் அக்ஷதா ஸ்ரீதர் அவர்களிடம் பேசும் போது, "ஸ்ரீதர் மாஸ்டர் அவர்களின் நடன இயக்கத்தில் அல்லாத பாடல்களில், சமீபத்தில் வந்த ஏதாவது ஒரு பாடல்… இந்தப் பாடலுக்கு இன்னும் நன்றாக நடன இயக்கம் செய்திருக்கலாமே என நீங்கள் ஏதாவது நினைத்திருக்கிறீர்களா?  என கேட்டபோது, "கட்டாயமாக, ரஞ்சிதமே! கண்டிப்பாக ரஞ்சிதமே பாடல் தான்! அதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம். அந்தப் பாடலில் இருப்பது விஜய் சார் அவர்களின் பாடி லாங்குவேஜ் கிடையாது. விஜய் சார் இன்னும் அழகாக ஆடுவார். அவருடைய ஸ்டைல் அவருடைய மாஸ் பயங்கரமாக இருக்கும். ஆனால் இது அவருக்கு சூட் ஆகவில்லை!" என அக்ஷதா ஸ்ரீதர் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி பொங்கல் வெளியீடாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளிவந்து பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வாரிசு திரைப்படத்தில் தமன்.S இசையில் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரல் ஹிட் ஆனது. இந்தப் பாடலில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடன இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்த போதும் கலவையான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் இது குறித்து முன்னணி நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் அவர்களின் மகள், அக்ஷதா ஸ்ரீதர் அவர்கள் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த முழு பேட்டி இதோ…
 

சர்ப்ரைஸாக வந்த தனுஷின் வாத்தி பட ஸ்பெஷல் பரிசு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

சர்ப்ரைஸாக வந்த தனுஷின் வாத்தி பட ஸ்பெஷல் பரிசு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான வீடியோ இதோ!

லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த தளபதி விஜயின் லியோ பட பிரபலம்... காரணம் என்ன? விவரம் உள்ளே
சினிமா

லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த தளபதி விஜயின் லியோ பட பிரபலம்... காரணம் என்ன? விவரம் உள்ளே

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ
சினிமா

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ