சர்ப்ரைஸாக வந்த தனுஷின் வாத்தி பட ஸ்பெஷல் பரிசு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான வீடியோ இதோ!

தனுஷின் வாத்தி பட வா வாத்தி வீடியோ பாடல் வெளியீடு,dhanush in vaathi movie vaa vaathi video song out now | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் தனக்கான முத்திரையை பதித்து விட்டார். அந்த வகையில் உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூஹோ சகோதரர்கள் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான தி கிரே மேன் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது அதரடி ஆக்ஷனில் மிரள வைத்தார். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் தி கிரேமேன் ஹாலிவுட் திரைப்படம் தவிர, தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என ஹாட்ரிக் ட்ரீட் கொடுத்த தனுஷ் இந்த 2023 ஆம் ஆண்டிலும் தனது வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார்.

அந்த வகையில், முதலாவதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட அதிரடி ஆக்ஷன் ப்ளாக் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பரில் பூஜையோடு தொடங்கப்பட்டது. இதனையடுத்து தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட, வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்ட வாத்தி திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாகஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 

தொடர்ந்து வருகிற மார்ச் 17ஆம் தேதி முதல் Netflix தளத்தில் வாத்தி திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாத்தி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த வா வாத்தி பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நிலையில், அசத்தலான வா வாத்தி பாடலின் வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அசத்தலான அந்த வீடியோ பாடல் இதோ…
 

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!
சினிமா

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!