'பிறந்தநாள் வாழ்த்துகள் என் சகோதரனே, மகனே!'- லோகேஷ் கனகராஜுக்கு சஞ்சய் தத்தின் அன்பு வார்த்தைகள்! ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு சஞ்சய் தத் வாழ்த்து,Sanjay dutt birthday wishes to lokesh kanagaraj leo movie | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வளம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மார்ச் 14ஆம் தேதி தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே தனி முத்திரை பதித்து ரசிகர்களுடைய கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமாக இயக்கிய கைதி திரைப்படத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தார்.

தனது மூன்றாவது படமாக தளபதி விஜய் உடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலா வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனாவின் கடினமான காலகட்டத்திலும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது திரைப்படத்தில் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ஆல் டைம் ரெக்கார்ட்டாக வசூல் சாதனை படைத்தது. இந்த வரிசையில் லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது படமாகவும் தளபதி விஜயின் 67-வது படமாகவும் இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமாக தற்போது தயாராகி வருகிறது லியோ. தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக  அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

முன்னதாக காஷ்மீரில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் சகோதரர், மகன், குடும்பமுமான லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கடவுள் இன்னும் உங்களுக்கு அதிகமான வெற்றி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை கொடுக்கட்டும். உங்கள் வாழ்க்கை முழுவதும் நான் எப்போதும் உடன் இருப்பேன். LOVE YOU" என லோகேஷ் கனகரஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.  வைரலாகும் அந்த புகைப்படம் இதோ... 
 

Happy birthday my brother, son, family @Dir_Lokesh, may God give you more success, peace, happiness and wealth, I am always with you for life, stay blessed. Love you! pic.twitter.com/9OW5Cj4pZo

— Sanjay Dutt (@duttsanjay) March 14, 2023

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ
சினிமா

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!
சினிமா

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!