லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த தளபதி விஜயின் லியோ பட பிரபலம்... காரணம் என்ன? விவரம் உள்ளே

லோகேஷ் கனகராஜுக்க பிறந்தநாள் வாழ்த்து கூறிய தீரஜ் வைதி,deeraj vaidy birthday wishes to lokesh kanagaraj | Galatta

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது கைதி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்காவது படமான விக்ரம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனையே இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வகையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெகார்ட்டாக 500 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த வரிசையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். லியோ ஷூட்டிங்கில் இயக்குனர் மிஷ்கின் தன் பகுதி படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். லியோ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி திரைக்கதை - வசனங்களில் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் நாளை மார்ச் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், இயக்குனர் தீரஜ் வைத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், என் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றி அமைத்த அந்த நாளில் நாம் எடுத்துக் கொண்ட நமது முதல் புகைப்படம். நீங்களாகவே இருப்பதற்கு நன்றி. அற்புதமான மனிதர்களையும் FILM MAKER-களையும் எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! அன்பு மற்றும் அன்பு மட்டும்தான்!!” எனக் குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட அந்த முதல் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.  இந்திய சினிமாவில் இன்றியமையாத இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இயக்குனர் தீரஜ் வைத்தியின் அந்தப் பதிவு இதோ…
 

Dear @Dir_Lokesh
Our first pic together on a day that altered the course of my life for good🙂 Thank you for being you. Thank you for paving the way for fellow film makers & also for introducing so many amazing people to me. Thank you for your existence🙂
Love and love only❤️ pic.twitter.com/OLVQNEf4qu

— Deeraj Vaidy (@DeerajVaidy) March 13, 2023

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!
சினிமா

வால் வெட்டப்பட்டு இருந்ததால் வளர்க்க முடியாது என சொன்னேன்... எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் வென்றது குறித்து மனம் திறந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி!

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!