“சூர்யா 42 முக்கியமான படமாக இருக்க போகுது..” மதன் கார்க்கி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரலாகும் முழு வீடியோ இதோ..

சூர்யா 42 திரைப்படம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி - Madhan Karky about Suriya 42 film | Galatta

தொடர் பெரிய படங்களை கொடுத்து வரும் இந்திய சினிமாவில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சூர்யா 42’ . தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சூர்யா. கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை சுவைக்கும் சூர்யாவிற்கு அடுத்ததாக கை சேர்ந்த திரைப்படம் இயக்குனர் சிவா வுடன் அமைந்தது. அதன் படி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3D தொழில் நுட்பத்தில் உருவாகி வருகிறது. முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகபெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படம் இந்தியாவின் 10 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான டைட்டில் வெளியீடு சிறப்பு வீடியோவுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் புரோமோ வெளியாகும் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் சூர்யா 42 படத்தில் பாடல்கள் மற்றும் வசனம் எழுதும் பிரபல பாடலராசிரியர் மதன் கார்க்கி அவர்களிடம் சூர்யா 42 படம் குறித்து கேட்கையில்,

அவர்,

"இயக்குனர் சிவா அவர்களுடன் வசனங்களுக்காக முதல்முறையாக வேலை பார்க்கிறேன். அதே மாதிரி தேவி சிரி பிரசாத் உடன் பாடல்களுக்காக முதல்முறையா வேலை செய்றேன். படப்படிப்பிற்கு 2 - 3 முறை நேரில் சென்று பார்த்து வந்தேன். படம் ரொம்ப மிரட்டலா சிவா பண்ணிட்டு இருக்காரு. ரொம்ப வித்யாசமான படம் இது. இந்த படம் பார்க்கும் போது சிவா சார் படம் னு சொல்ல மாட்டாங்க.. அதே மாதிரி சூர்யா சாருக்கும் இது முக்கியமான படமாக இருக்க போகுது.. எழுத்துப்பூர்வமா அந்த படத்தின் கதைய பார்க்கும் போது எங்களுக்கு இருந்த உணர்வு அழகா படமாகும் னு நினைக்கிறேன். அப்படி ஆனது பார்வையாளர்களுக்கு நிச்சயமா பிடிக்கும். அப்படி இருந்தா இது ரொம்ப பெரிய படமா இருக்கும்" என்றார் மதன் கார்க்கி.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

 

விரைவில் ‘சூர்யா 42’ ப்ரோமோ! அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த பிரபலம்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விரைவில் ‘சூர்யா 42’ ப்ரோமோ! அட்டகாசமான அப்டேட்டை பகிர்ந்த பிரபலம்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

பிரம்மாண்டமாக தயாராகும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… சர்ப்ரைஸாக வந்த புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சர்ப்ரைஸ் உடன் வந்த ஏ ஆர் ரஹ்மான்.. -  2nd Single வீடியோவை வெளியிட்ட படக்குழு..
சினிமா

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சர்ப்ரைஸ் உடன் வந்த ஏ ஆர் ரஹ்மான்.. - 2nd Single வீடியோவை வெளியிட்ட படக்குழு..