சூர்யாவின் பிரம்மாண்டமான சூர்யா42 பட அதிரடியான ப்ரோமோ ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்... விளக்கமளித்த முன்னணி தயாரிப்பாளர்!

சூர்யா42 பட ப்ரோமோ ரிலீஸ் குறித்து முன்னணி தயாரிப்பாளர் விளக்கம்,producer dhananjayan clarifies suriya 42 promo release date buzz | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க, கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதனை அடுத்து கடந்த 2022ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கொண்டாடப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் குறிப்பிடப்படும் கேமியோ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்த நடிகர் சூர்யா ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார்.

தொடர்ந்து நடிகர் மாதவன் முதல் முறை இயக்குனராக களமிறங்கிய ராக்கெட்ரி - நம்பி விளைவு திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் சூர்யா, தனக்கு முதல் தேசிய விருது பெற்று கொடுத்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கோங்கர இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தனது திரை பயணத்தில் 42 ஆவது திரைப்படமாக சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகும் சூர்யா 42 திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. UV CREATIONS வழங்க பிரம்மிப்பூட்டும் பீரியட் திரைப்படமாக தயாராகி வரும் சூர்யா 42 திரைப்படத்தை இந்தியாவின் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

முன்னதாக சூர்யா42 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ ஆகியவற்றிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். ப்ரோமோவுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த ஓரிரு தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் ஏப்ரல் 14 என பதிலளித்திருந்தார். பின்னர் அந்த பதிலை நீக்கிவிட்டார். இந்நிலையில் அது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களே அவசரப்பட வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும். இது சூர்யா42 அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. தெரியாமல் தவறுதலாக அந்த பதில் வந்துவிட்டது. இப்போது நீக்கப்பட்டு விட்டது. தயவு செய்து பொறுமையாக இருக்கவும்!" என விளக்கமளித்துள்ளார். முன்னாடி தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் இது குறித்து சரியான விளக்கத்தை தற்போது கொடுத்திருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Folks, don't rush. Official announcement will come. This is NOT official on #Suriya42.

By mistake that tweet reply got posted & now deleted. Please have patience 🙏 https://t.co/apjykSSoit

— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) March 13, 2023

லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த தளபதி விஜயின் லியோ பட பிரபலம்... காரணம் என்ன? விவரம் உள்ளே
சினிமா

லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்த தளபதி விஜயின் லியோ பட பிரபலம்... காரணம் என்ன? விவரம் உள்ளே

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ
சினிமா

சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் மிரட்டலான போலீஸ் படம்... அதிரடி அறிவிப்போடு வந்த மாஸான வீடியோ இதோ!