வெறித்தனமான காட்சிகளுடன் வெளியானது ‘தசரா’ டிரைலர் .. - மிரட்டலான தோற்றத்தில் நானி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நானி நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் தசரா படத்தின் டிரைலர் இதோ - Nani Dasara Team Released Raw and Rustic Trailer | Galatta

இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் நானியின் ‘தசரா’. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடில்லா இயக்கத்தில் SLV சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நானியுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி,சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தென்னிந்தியா திரையுலகில் இருந்து வெளியாகும் அடுத்த பான் இந்திய திரைப்படமான தசரா படத்தில்  பிளாக் பஸ்டர்ஹிட் கொடுத்த கைதி, மாஸ்டர் படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி சுரங்கம் கதைகளத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள தசரா திரைப்படத்தின் முதல் பார்வை முதல் டீசர் வரை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு..  புழுதி பறக்கும் பார்வையில் முரட்டு தனமான தோற்றத்தில் நானி இரத்தம் தெறிக்க தெறிக்க சண்டையிடும் காட்சிகளுடன் வெளியாகிருக்கும் டிரைலர் தற்போது பார்வையளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.  ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று தசரா பட டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான கதைக் களத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது

தென்னிந்தியா சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களும் ஏற்று கொண்ட ஒரு நடிகர் நானி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் அளவு திரைப்படங்களை இதுவரை கொடுத்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் நானி அவர்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் உயிரோட்டமாக நடிப்பதில் நானி வல்லவர் என்பதாலே ரசிகர்களால் அவர் நேச்சுரல் ஸ்டார் என்றழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான ‘டக் ஜகதீஸ்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரனிக்கி’ ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் நடிப்பில் அடுத்தததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘தசரா’ . டிரைலர் வெளியீட்டுக்கு பின் நானியின் தொடர் வெற்றிகளை தசரா திரைப்படமும் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் -  முழு வீடியோ இதோ..
சினிமா

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் - முழு வீடியோ இதோ..

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..