"இது இந்திய சினிமாவையே மாற்றும்.." மாரி செல்வராஜின் 'வாழை' படம் குறித்து சந்தோஷ் நாராயணன்.. - சுவாரஸ்மான வீடியோ இதோ..

மாரி செல்வராஜின் 'வாழை' படம் குறித்து சந்தோஷ் நாராயணன்  - Santhosh Narayanan about Mari Selvaraj Vaazhai movie | Galatta

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராம் உதவி இயக்குனரான இவர் இயக்குனர் பா ரஞ்சித்தின்  நீலம் தயாரிப்பில் வெளியான ‘பரியேரும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். முதல் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை திரைப்படம். அதன்பின் இரண்டாவது படத்தை தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் ஒருவரான தனுஷை வைத்து ‘கர்ணன் திரைப்படத்தை கொடுத்தார் மாரி செல்வராஜ். எதிர்பார்த்த வகையில் திரைப்படம் அனைத்து மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரிக்கும் ‘மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ‘வைகை புயல்’ வடிவேலு, பாஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக் கட்ட வேலையில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க உடனடியாக தனது நான்காவது படத்தை இயக்க தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  மற்றும் நவி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘வாழை என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். முதல் பார்வையிலிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வாழை திரைப்படம் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் பகிர்ந்து கொண்டவை,   

"நான் இதுவரை தமிழில் பார்த்ததில் மிகச்சிறந்த திரைப்படம் அது. நான் மாரி செல்வராஜ் நினைத்து பெருமையடைகிறேன். உணர்வு பூர்வமாக அதிர்ச்சி தரும்படியும் நிறைய உணர்வுகளை அந்த படம் எனக்கு கொடுத்தது. நான் இதுவரை அப்படி உணர்ந்ததில்லை.அந்த படம் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தது. அதனால் மாரி க்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தேன்.நீங்கள் எவ்வளவு எதிர்பார்ப்பு வைத்திருக்கிறீர்களோ படம் அதையெல்லாம் மீறிதான் இருக்கும்.. மாரிசெல்வராஜின் வாழை திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.படம் அருமையாக வந்திருக்கிறது. அதற்கு வேறு மாதிரியான நவீன இசையை அமைக்க விருக்கிறோம்."  என்றார் சந்தோஷ் நாராயணன்.

மாமன்னன் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியானது. மேலும் மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமான வாழை அடுத்த ஆண்டு துவக்கத்தில் திரையரங்கம் அல்லது ஒடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் -  முழு வீடியோ இதோ..
சினிமா

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் - முழு வீடியோ இதோ..

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..

அட்டகாசமான ஹாரர் காமெடியில் காஜல் அகர்வால் - ரசிகர்களை கவர்ந்து வரும் ‘கோஸ்ட்டி பட  வீடியோ சாங் இதோ..
சினிமா

அட்டகாசமான ஹாரர் காமெடியில் காஜல் அகர்வால் - ரசிகர்களை கவர்ந்து வரும் ‘கோஸ்ட்டி பட வீடியோ சாங் இதோ..