சிலம்பரசன்TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல... ARரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் அடுத்த ட்ரீட்! புது வீடியோ இதோ

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் நினைவிருக்கா பாடல் வெளியானது,silambarasan tr in pathu thala movie ninaivirukka song out now | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து அட்டகாசமான லுக்கில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். புதிய லுக்கில் ஈஸ்வரன் படத்தில் கம்பேக் கொடுத்த சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ருசித்து தான் ஒரு வெற்றி நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்தார். தனது வெற்றி பயணத்தின் அடுத்த படியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறையாக இணைந்த சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் வழக்கமான பாணியில் இருந்து விலகி தரமான கேங்ஸ்டர் படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க உள்ளது.

முன்னதாக தனது அடுத்த திரைப்படத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ஜுங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அடுத்த படமாக தனது திரைப்பயணத்தில் 48வது படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் STR48 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடிக்கும் STR48 திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டான நிலையில், அடுத்த பாடலாக நினைவிருக்கா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழையில் மனதை மயக்கும் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். ரம்மியமான அந்த வீடியோ இதோ…
 

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அட்டகாசமான பீரியட் படம்... ரொமான்டிக்கான சீனிக்காரி பாடல் இதோ!

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

AK62 - உலக சுற்றுப்பயணத்திற்கு முன்பு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

'யார் இந்த சர்க்கிள்?'- உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்... காரணம் இது தான்!
சினிமா

'யார் இந்த சர்க்கிள்?'- உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்... காரணம் இது தான்!