ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைதேர்வினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி.தொடர்ந்து தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் அருள்நிதி.

வம்சம்,மௌன குரு,டிமான்டி காலனி,ஆராது சினம்,கே 13 என்று வரிசையாக இவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.கடைசியாக ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த களத்தில் சந்திப்போம் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து டைரி,தேஜாவு,D பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

D பிளாக் படத்தினை MNM பிலிம்ஸ் மற்றும் சக்தி பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர்.எரும சானி புகழ் விஜய் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.ரான் எத்தன் யோஹன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கரு பழனியப்பன்,உமா ரியாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அவந்திகா மிஸ்ரா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்