தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராகவும் குறிப்பிட்டபடும் நடிகராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ரசிகர்களுக்கு நல்ல படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் M.சசிகுமார், தற்போது அஞ்சல திரைப்படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக M.சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வரும் நிலையில், இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான காமன்மேன் திரைப்படமும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் M.சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் காரி. காரி திரைப்படத்தில் பார்வதி அருண், சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெட்டின் கிங்ஸ்லீ, நாகி நீடு, ராம்குமார் & சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சசிகுமாரின் காரி திரைப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள காரி திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் இதோ…