அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அருண் விஜய். அந்த வகையில் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான அக்னிச்சிறகுகள் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

முன்னதாக பார்டர், சினம், பாக்சர் என வரிசையாக அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் தற்போது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள நடிகர் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூலை 1-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அருண் விஜய்யின் யானை திரைப்படத்தில் இருந்து சண்டாளியே பாடல் தற்போது வெளியானது. அசத்தலான அந்த பாடல் இதோ...