தமிழ் ரசிகர்களின் அபிமானமான யூடியூபர்களில் மிகவும் முக்கியமானவர் எரும சாணி விஜய் குமார். தனது எரும சாணி யூடியூப் சேனலில் ரசிகர்கள் விரும்பும் பல நகைச்சுவையான யூடியூப் வீடியோக்களை இயக்கி நடித்து வெளியிட்ட எரும சாணி விஜய் தமிழகத்தின் முன்னணி யூடியூபர்களில் ஒருவராகவும் வளர்ந்தார்.

யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த விஜய் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார். அந்தவகையில் எரும சாணி விஜய் முதல்முறை இயக்குனராக இயக்கிய D-Block திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்தார். இப்படத்தில் எருமசாணி விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டுவந்த எரும சாணி விஜய் இடமிருந்து விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த D-Block திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எருமசாணி விஜய்யின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் எரும சாணி விஜய் விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் பெண் பார்க்கும் நாள்" என குறிப்பிட்டு தனது வருங்கால மனைவியான, நக்ஷத்ரா மூர்த்தியுடன் விஜயகுமார் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Eruma saani Vijay (@vijayviruz)

 

View this post on Instagram

A post shared by Eruma saani Vijay (@vijayviruz)