ஆல்டைம் காமெடி என்டர்டெய்னராக படமாக தமிழ்சினிமாவில் 1970களில் வெளியாகி மெகா ஹிட்டான நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. இயக்குனர் சித்ராலயா கோபுவின் சூப்பர் ஹிட் மேடைநாடகமான காசேதான் கடவுளடா ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திரைப்படமாக தயாராக காசேதான் கடவுளடா திரைப்படத்தையும் இயக்குனர் சித்ராலயா கோபுவே எழுதி இயக்கியிருந்தார். 

இதனையடுத்து தற்போது காசேதான் கடவுளடா திரைப்படம் ரீமேக்காகியுள்ளது. இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை இயக்குனர் கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

நடிகர் சிவா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் காசேதான் கடவுளடா ரீமேக்கில் நடிகைகள் ஊர்வசி & ப்ரியா ஆனந்த் மற்றும் நடிகர்கள் கருணாகரன் & தலைவாசல் விஜய் , குக்கு வித்து கோமாளி சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராஜ் பிரதாப் காசேதான் கடவுளடா ரீமிக்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கிளாசிக் காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ஜம்புலிங்கமே பாடலின் புதிய வெர்ஷனாக காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் ஜம்புலிங்கமே பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடல் இதோ…