தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த ஆண்டில் (2022) இதுவரை மகான், கடைசி விவசாயி, குலுகுலு ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

தொடர்ந்து அடுத்ததாக வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகும் நாய் சேகர் ரிட்டன்ஸ், அந்தாதுன் படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள அந்தகன், நானி கதாநாயகனாக நடிக்கும் தசரா, ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள அனல் மேலே பனித்துளி ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் மலையாளத்திலும் பத்யொன்பதாம் நூட்டாண்டு மற்றும் அன்வேஷிப்பின் கண்டெத்தும் ஆகிய படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 

இந்த வரிசையில் அடுத்ததாக புதிய வெப் சீரிஸுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் வெப் சீரிஸ் ஃபாடு. சௌமியா ஜோஷி எழுதியுள்ள ரொமான்டிக் லவ் ஸ்டோரியான ஃபாடு வெப் சீரிஸ் விரைவில் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஃபாடு வெப் சீரிஸுக்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் இசை பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Santhosh Narayanan (@musicsanthosh)