குக் வித் கோமாளி பிரபலங்களின் கலக்கல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | February 02, 2021 08:28 AM IST
விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.
சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.
கடந்த வருடமும் குக் வித் கோமாளி என்ற தொடரை அறிமுகம் செய்தது விஜய் டிவி.சமையல் போட்டியில் நகைச்சுவை கலைஞர்களை இறக்கி அசத்தினர்.இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாக இருந்தது.மேலும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக மாறிவிட்டனர்.
குறிப்பாக புகழ்,பாலா,சிவாங்கி,மணிமேகலை,
தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் அசத்தி வரும் ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.ஷிவாங்கி மற்றும் புகழ் இணைந்து பாடல் பாடும் வீடியோ ஒன்று செம வைரல் ஆகி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Surprise announcement: Kutti Love Story to release in theatres | FL released
01/02/2021 07:00 PM
Karthi's Sulthan Official TEASER - Check Out | Rashmika Mandanna
01/02/2021 05:29 PM
Mohanlal announces new season of Bigg Boss - exciting promo teaser launched!
01/02/2021 05:00 PM