கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.அம்மன்,இதயத்தை திருடாதே, போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மன்.

பவித்ரா கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.அமல்ஜித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.சுபா ரக்ஷா,ஆனந்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல சீரியல் நடிகை நிவிஷா மற்றொரு நாயகியாக இந்த தொடரில் இணைந்தார்.இந்த தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் நிறைவடையவுள்ளது.செம ஹிட் அடித்த இந்த தொடரின் மூன்றாவது சீசன் தொடங்குவதாக கலர்ஸ் தமிழ் அறிவித்துள்ளனர்.இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.