தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் ஆதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஈரம், இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம், ரங்கஸ்தலம் மற்றும் யூ-டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆதி கடந்த மாதம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த குட் லக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் தி வாரியர் படத்தில் மிரட்டலான வில்லனாக ஆதி நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் ஆதி நடிப்பில் அடுத்ததாக விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் கிளாப். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் சர்வானந்த் ராம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள கிளாக் திரைப்படத்தை இயக்குனர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ளார். கிளாப்  திரைப்டத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

நடிகை ஆகாங்க்ஷா சிங், கிருஷ்ணா குருப், பிரகாஷ்ராஜ்,மைம் கோபி  மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கிளப் திரைப்படம் நேரடியாக SONY Liv OTT தளத்தில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.