தமிழ் திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த பரம்பரா வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வானம் கொட்டட்டும்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசனின் உதவி இயக்குனரும் தூங்காவனம் & கடாரம்கொண்டான் படங்களின் இயக்குனருமான ராஜேஷ்.M.செல்வா இயக்கத்தில் தயாராகியுள்ள இரை வெப் சீரிலும் சரத்குமார் நடித்துள்ளார். நேரடியாக aha Tamil OTT தளத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸாகும் இரை வெப் சீரிஸை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் இணைந்து நிழல்கள் ரவி, அபிஷேக் ஷங்கர், ஸ்ரீகிருஷ்ணா தயால், கௌரி நாயர், ஸ்ரீரஞ்சனி பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரை வெப் சீரிஸுக்கு S.யுவா ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இரை வெப் சீரிஸின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…