தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் சீயான் விக்ரம். அந்த வகையில் கோப்ரா திரைப்படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கவுள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற கோடை வெளியீடாக ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் உடன் இணைந்துள்ள நடிகர் விக்ரம் ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் நாளை (பிப்ரவரி 10ஆம் தேதி) நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள மகான் திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இதுவரை மகான் படத்தில் இருந்து வெளிவந்த டீசர் ட்ரெய்லர் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திரைப்படத்திலிருந்து அதிரடியான ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ...