படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள நடிகர் சீயான் விக்ரம் 20க்கும் மேற்பட்ட அட்டகாசமான கெட்டப்களில் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் உடன் இணைந்து கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முன்னதாக கோப்ரா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக தமிழகத்தின் முன்னணி நகரங்கள், ஹைதராபாத், பெங்களூர், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு படக்குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அந்த வகையில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது  தன்னை சந்திப்பதற்காக அளவற்ற அன்போடு வந்த ரசிகர் குறித்த வீடியோ ஒன்றை விக்ரம் வெளியிட்டுள்ளார். பல ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் தீவிர ரசிகர் ஒருவர் சீயான் விக்ரம் என மிகுந்த ஆர்வத்தோடு கோஷமிட்டு  பவுன்சர்களிடம் தன்னை அனுமதிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் சீயான் விக்ரம் பதிவிட்டுள்ளார் .

மேலும் "நீண்ட நாட்களுக்குப் பிறகு  மிகவும் அழகான, அதே சமயம் வருத்தம் தரக்கூடிய ஒரு வீடியோ இது... நான் உன்னை பார்த்தேன்… என்னால் உன்னை உணர முடிகிறது தோழா… நீங்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில், நாம் சந்திப்போம்… நாம் பேசுவோம்…  இது சத்தியம் ! "என தெரிவித்து சீயான் விக்ரம் எமோஷனலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீயான் விக்ரமின் அந்த பதிவு இதோ…
 

One of the sweetest yet saddest videos I have seen in a long time.
I see you & I feel you my friend.
We will meet .
We will speak..
sooner than you expect.
And that’s a promise. നിങ്ങളുടെ മനോഹരമായ സ്നേഹത്തിന് നന്ദി, എന്റെ പ്രിയ സുഹൃത്തേ. pic.twitter.com/zv2aVXwsIO

— Chiyaan Vikram (@chiyaan) August 30, 2022