இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்தவகையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ஷங்கர் படத்தில் தமன்னா தற்போது நடித்து வருகிறார்.

போலா ஷங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக தமன்னாவின் குர்துண்டா சீதாகலம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், தொடர்ந்து போலே சுடியான் மற்றும் தட் இஸ் மஹாலக்ஷ்மி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்த வரிசையில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிளான் ஏ பிளான் பி.

இயக்குனர் ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ள பிளான் ஏ பிளான் பி திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பிளான் ஏ பிளான் பி திரைப்படத்தின் டீசர் சற்று முன்பு வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்த டீசர் இதோ…