தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இதனை அடுத்து 3-வது முறையாக மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அஜித்குமார்-H.வினோத்-நீரவ்ஷா-போனிகபூர் வெற்றிக் கூட்டணியில் 3வது திரைப்படமாக தயாராகி வரும் AK61 திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். AK61 படத்தில் முழுக்க முழுக்க வெள்ளை நிற தலை முடி மற்றும் தாடியுடன் அட்டகாசமான கெட்டப்பில் இருக்கும் அஜித் குமாரின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள AK62 திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா உடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. எனவே AK62 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#AK #AjithKumar With #AK62 Producer Subaskaran Allirajah ❤️🤩💥@LycaProductions pic.twitter.com/0MKVFmsVtc

— AK FANS COMMUNITY™ (@TFC_mass) August 29, 2022