பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சித்ரா.இவர் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் பணியாற்றி அசத்தியிருந்தார்.கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மறைவு பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது,அதில் சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.இந்த வழக்கை RDO விசாரிக்க உத்தரவிட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.மேலும் சித்ராவின் நெருங்கிய நண்பர்கள் அவருடன் பணிபுரிந்த நடிகர்,நடிகைகள் என்று பலரிடமும் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவுபெற்றுள்ளது. விசாரணை முடிந்த நிலையில், காவல் நிலையத்தில் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கியது. இன்னும் மூன்று நாட்களில் ஆர்டிஓ விசாரணை குறித்த 250 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.