மாடலாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பிஸியான சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ப்ரீத்தி ஷர்மா.மாடல் ஆக பல மேடைகளை அசத்திய இவர் சில போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார்,இவற்ற்றை தவிர பல போட்டோஷூட்கள் மூலம் பிரபலமான மாடல் ஆக இருந்தார் ப்ரீத்தி ஷர்மா.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் தொடரின் மூலம் தனது சீரியல் என்ட்ரியை கொடுத்தார் ப்ரீத்தி ஷர்மா.இந்த தொடரில் தனது நடிப்பால் அசத்திய ப்ரீத்தி சன் டிவியின் சித்தி 2 தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார் ப்ரீத்தி.இந்த தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ப்ரீத்தி.

500 எபிசோடுகளை நோக்கி இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.இவற்றை தவிர சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.தெலுங்கிலும் கீதாஞ்சலி என்ற சீரியலில் நடித்து அசத்தி வருகிறார் ப்ரீத்தி ஷர்மா.

போட்டோ எடுப்பதில் பெரிதும் ஆர்வமுடைய ப்ரீத்தி ஷர்மா,இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது இவரது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்