விருமன் பட வெற்றிக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!
By Anand S | Galatta | August 17, 2022 19:58 PM IST
தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், படத்திற்கு படம் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் கார்த்தி இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.
முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் மிக பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இதனிடையே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த விருமன் திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் சக்திவேலன் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மாபெரும் வெற்றி பெற்றுள்ள விருமன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா உட்பட படக்குழுவினருக்கு சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் அவர்கள் வைர பிரேஸ்லெட் மற்றும் வைர மோதிரம் பரிசளித்துள்ளார். விருமன் வெற்றி விழா கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ…
Marking the colossal blockbuster success of #Viruman, Tamil Nadu distributor @SakthiFilmFctry @sakthivelan_b gifted diamond bracelets to @Suriya_offl @Karthi_Offl @rajsekarpandian and Diamond ring to @dir_muthaiya pic.twitter.com/Je0IXBpP8S
— Yuvraaj (@proyuvraaj) August 17, 2022