இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து இயக்குனர் VJ.கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜீவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தவர் நடிகர் வெற்றி.

கடைசியாக வெற்றி நடிப்பில் வெளிவந்த வனம் மற்றும் ஜோதி ஆகிய திரைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. ரசிகர்களை கவரும் வகையில் பலவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றி நடிப்பில் மெமரிஸ், கண்ணகி, ரெட் சாண்டல் மற்றும் பம்பர் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இதனிடையே ஜீவி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாரான ஜீவி 2 திரைப்படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் VJ.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி 2 திரைப்படத்தில் வெற்றியுடன் இணைந்து கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீவி 2 திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 19-ம் தேதி) நேரடியாக Aha தமிழ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ஜீவி 2 திரைப்படத்திலிருந்து Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. கவனம் ஈர்க்கும் ஜீவி 2 படத்தின் Sneak Peek வீடியோ இதோ…