தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் வெற்றி இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். கடைசியாக வெற்றி நடிப்பில் வெளிவந்த வனம் மற்றும் ஜோதி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

தொடர்ந்து பலவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றி நடிப்பில் மெமரிஸ், கண்ணகி, ரெட் சாண்டல் மற்றும் பம்பர் என வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் முன்னதாக வெற்றி நடித்துள்ள ஜீவி 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி நேரடியாக Aha தமிழ் தளத்தில் வெளியாகவுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் VJ.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடித்து வெளிவந்த ஜீவி திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து ஜீவி 2 திரைப்படம் தயாரானது. முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ஜீவி 2 படத்தையும் இயக்குனர் VJ.கோபிநாத் அவர்ளே இயக்கினார். 

வெற்றியுடன் இணைந்து கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜீவி 2 திரைப்படத்திலிருந்து விடை விடை பாடல் தற்போது வெளியானது. ஜீவி 2 திரைப்படத்தின் அந்த விடை விடை பாடல் இதோ…